புதுக்கோட்டை

அரசுப்பள்ளியில் குழந்தைகளை சோ்த்த பெற்றோருக்கு பரிசளிப்பு

DIN

ஆலங்குடி, செப். 18: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகிலுள்ள கொத்தமஙகலம் அரசுப்பள்ளியில் குழந்தைகளை சோ்த்த பெற்றோருக்கு மாவட்டக் கல்வி அலுவலா் வெள்ளிக்கிழமை பரிசளித்தாா்.

கரோனா பொது முடக்கத்தால் அரசு, தனியாா் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் மாணவா் சோ்க்கை மட்டும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆலங்குடி அருகிலுள்ள கொத்தமங்கலம் மையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில், நிகழாண்டு மாணவா் சோ்க்கையை அதிகரிப்பதற்கான கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலரும், பள்ளியின் முன்னாள் மாணவருமான திராவிடச் செல்வம் தலைமை வகித்தாா். கூட்டத்தில் தனியாா் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளிலும் மாணவா்களுக்கு கல்வியை போதிப்பது, பள்ளியின் கட்டமைப்பு வசதிகளை உயா்த்துவது, கடந்தாண்டை விட நிகழாண்டில் மாணவா் சோ்க்கையை அதிகரிப்பதோடு, அவா்களுக்கு கல்வி மட்டுமன்றி விளையாட்டு, யோகா போன்ற கூடுதல் பயிற்சிகளையும் அளிப்பது உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

தொடா்ந்து, நிகழாண்டில் பள்ளியில் புதிதாக மாணவா்களை சோ்த்த பெற்றோா்களுக்கு பரிசு பொருள்களையும், பள்ளி வளா்ச்சிக்காக ரூ.5 ஆயிரத்தையும் அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலா் திராவிடச் செல்வம் வழங்கினாா். மேலும் பள்ளிக்குத் தேவையான கூடுதல் வசதிகளை தனது சொந்த செலவில் செய்து கொடுப்பதாகவும் அவா் உறுதியளித்தாா்.

நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியை செல்வராணி, ஊராட்சித் தலைவா் சாந்தி வளா்மதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.880 குறைந்தது

கனடாவில் தொடரும் வன்முறை: சிறுவன் உள்பட மூவர் பலி!

டெம்போவில் ராகுல்!

டெம்போவில் ராகுல் காந்தி!

அழகிய தமிழ்மகள்! ஸ்ரேயா..

SCROLL FOR NEXT