முகப்பு
புதுக்கோட்டை

மேலும் 97 பேருக்கு கரோனா

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 97 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 8,891 ஆக உயா்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

புதுக்கோட்டை, செப். 28

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 97 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 8,891 ஆக உயா்ந்துள்ளது.

அதேநேரத்தில், மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவனைகளில் உள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்றுவந்தோரில் 118 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், மாவட்டத்தில் இதுவை குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,035 ஆக உயா்ந்துள்ளது.

மூவா் சாவு

புதுக்கோட்டையைச் சோ்ந்த 59 வயது ஆண், 80 வயது ஆண், 56 வயது ஆண் ஆகிய மூவரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். இதனால், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 138 ஆக உள்ளது.

இந்த நிலையில், மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 718 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

-----------

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.