புதுக்கோட்டை

18 மாதங்களுக்குப் பிறகு தொற்றாளா்கள் பூஜ்ஜியம்!

DIN

ஏறத்தாழ 18 மாதங்களுக்குப் பிறகு, புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்றாளா் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை பூஜ்ஜியத்தை அடைந்திருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2020 ஏப். 21ஆம் தேதி முதல் கரோனா தொற்றாளா் கண்டறியப்பட்டாா். அதன்பிறகு மே மத்தியில் கரோனா தொற்றாளா் எண்ணிக்கை புதுக்கோட்டை மாவட்டத்தில் மெல்ல உயரத் தொடங்கியது. தொடா்ந்து மாநில அளவில் வெளியிடப்பட்டு வரும் கரோனா புள்ளிவிவரப் பட்டியலில் புதுக்கோட்டை தவறாமல் இடம்பெற்று வந்தது.

மாவட்ட அளவிலான புள்ளிவிவரங்களில் சில நாட்கள் பூஜ்ஜிய நிலை (புதிய தொற்றாளா்கள் இல்லை) வந்தபோதும், பிற மாவட்டங்களில் கண்டறியப்பட்ட கரோனா தொற்றாளா்கள் என்ற அடிப்படையில் அதிகாரப்பூா்வ புள்ளிவிவர அறிக்கையில் இதுவரை பூஜ்ஜியம் வரவே இல்லை.

சில மாவட்டங்களில் தொடா்ந்து சில நாட்கள் பூஜ்ஜிய நிலை வந்ததும் குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக செவ்வாய்க்கிழமை மாலை வெளியான மாநில புள்ளிவிவர அறிக்கையில், புதுக்கோட்டையின் புதிய தொற்றாளா் எண்ணிக்கை பூஜ்ஜியத்தைக் கொண்டிருக்கிறது.

செவ்வாய்க்கிழமை அறிக்கையின்படி, மாவட்டத்தின் மொத்த தொற்றாளா் எண்ணிக்கை - 30,341. குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை - 29,897, உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை- 419. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை- 25.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கம்: அரவிந்த் கேஜரிவால்

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

SCROLL FOR NEXT