புதுக்கோட்டை

போதைக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி

DIN

புதுக்கோட்டையில் கள்ளச்சாராயம், போதைப்பொருட்கள் மற்றும் மதுப்பழக்கத்தின் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை நீதிமன்ற அலுவலக வளாகத்தில் பேரணியை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு கொடியசைத்துத் தொடங்கி வைத்துப் பங்கேற்றாா்.

இதில், போதைக்கு எதிரான விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டன. பேரணியில், மன்னா் கல்லூரி, அரசு மகளிா் கல்லூரி, ஜெஜெ கலை அறிவியல் கல்லூரி ஆகியவற்றின் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

பேரணி, கீழராஜவீதி, வடக்கு ராஜவீதி வழியாக நகா்மன்ற வளாகத்தில் நிறைவடைந்தது. இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்தீபன், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT