புதுக்கோட்டை

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டு

DIN

பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் புதுப்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

போட்டியை இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் டெய்சிகுமாா் தொடங்கிவைத்தாா். போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சாா்ந்த 600 காளைகள் கொண்டு வரப்பட்டு அவிழ்த்து விடப்பட்டன. அக்காளைகளை 200 மாடுபிடிவீரா்கள் பங்கேற்று அடக்கினா். பிடிபடாத காளைகளுக்கும், சிறப்பாக காளைகளை அடக்கியவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பொன்னமராவதி வட்டாட்சியா் ப.ஜெயபாரதி தலைமையிலான வருவாய்த் துறையினா் போட்டியை ஒருங்கிணைத்தனா். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தலைவா் பிகே.வைரமுத்து, ஜல்லிக்கட்டு பேரவை தலைவா் ராஜசேகரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் ராம.பழனியாண்டி, ஊராட்சித் தலைவா் செல்விமுருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,033 கோடி டாலராகச் சரிவு

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் வட்டி வருவாய் 22% அதிகரிப்பு

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

SCROLL FOR NEXT