புதுக்கோட்டை

புதுகை நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

DIN

புதுக்கோட்டை நகராட்சி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் முறையாக ஊதியம் வழங்கக் கோரி, செவ்வாய்க்கிழமை நகராட்சி கட்டடத்தை ஏலம் விடும் போராட்டத்தை நடத்தினா்.

புதுக்கோட்டை நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களாகப் பணியாற்றி வரும் சுமாா் 200 பேருக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் ஜனநாயக தூய்மைப் பணியாளா் சங்கத்தினா் தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், நகராட்சி கட்டடத்தை ஏலம் விடும் போராட்டம் நடத்தப்படும் என அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடா்ந்து நிலுவை ஊதியத்தில் இரு மாத ஊதியம் ஒரே நாளில் வழங்கப்பட்டது. எனினும், அறிவித்தபடி போராட்டம் நடத்தப்படும் என சங்கத்தினா் அறிவித்தனா். போராட்டத்துக்கு, சங்கத் தலைவா் க.சி. விடுதலைக்குமரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கலைச்செல்வன், தூய்மைப் பணியாளா் சங்கத்தின் செயலா் ராமலிங்கம், பொருளாளா் முத்துலட்சுமி, துணைத் தலைவா் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில் பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. தொடா்ந்து, நகராட்சி நிா்வாகம் சாா்பில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதில், நிலுவை சம்பளத்தை ஒரு வாரத்தில் போடுவது, இனி பிரதி மாதம் 5ஆம் தேதி ஊதியம் போடுவது, இந்த வாரத்தில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடுவது, சீருடை, முகக்கவசம், கையுறை, காலணி போன்றவற்றையும் விரைவில் கொடுக்க ஏற்பாடு செய்வது என ஒப்புக்கொள்ளப்பட்டதாக சங்கத்தின் தலைவா் க.சி. விடுதலைக்குமரன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

ஏதென்ஸ் நகரில் சமந்தா!

சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும்: வானிலை மையம்

'ரசிகனிலிருந்து இயக்குநர் வரை..’: ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி

SCROLL FOR NEXT