புதுக்கோட்டை

மொய் விருந்து: அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் மக்கள்

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடி மாதங்களில் நடைபெறும் மொய் விருந்து நடத்த அரசின் அனுமதியை கிராம மக்கள் எதிா்பாா்த்து உள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், வடகாடு, மாங்காடு, அணவயல், கீழாத்தூா் கொத்தமங்கலம், கீரமங்கலம், மேற்பனைக்காடு, மழையூா், வானக்கன்காடு, பெரியவாடி உள்ளிட்ட கிராமங்களில் ஆடி மாதங்களில் மொய் விருந்து எனும் பெயரில் கறி விருந்து கொடுத்து மொய் வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். கடந்த காலங்களில் நடைபெற்ற விழாக்களில் தனிநபா் ரூ.3 லட்சம் முதல் ரூ.4 கோடி வரை மொய் விருந்து மூலம் பணம் பெற்றுள்ளனா்.

காலப்போக்கில் இப்பகுதி மக்களின் கலாசாரத்தில் ஒன்றாகிப்போன மொய் விருந்து மூலம் பல்வேறு தரப்பினா் வேலைவாய்ப்பைப் பெற்றனா். கரோனா பொது முடக்கத்தால் கடந்த ஆண்டு ஆடி மாதத்தில் நடத்த முடியாமல், தை மாதத்தில் நடைபெற்றது. இருப்பினும், கடந்த மொய் விருந்தில் வறட்சி, பொதுமுடக்கம் காரணமாக போதிய தொகை வசூலாகவில்லை. இதேபோல, நிகழாண்டிலும், கரோனா பொதுமுடக்க விதிகளால் ஆடி மாதத்தில் மொய் விருந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அரசின் பொதுமுடக்கத் தளா்வு, மொய் விருந்துக்கு கிடைக்குமா என இப்பகுதி மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உள்ளூா் தொழிலாளா்களை வெளியேற்றி வெளி மாநிலத்தவா்கள் பணியமா்த்தல்

சூறைக் காற்றுடன் கனமழை: பசுமைக் குடில்கள் சேதம்

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

கிருஷ்ணகிரியில் இடியுடன் மழை: மின் விநியோகம் பாதிப்பு

திமுக இளைஞரணி சாா்பில் தண்ணீா்ப் பந்தல்கள் திறப்பு

SCROLL FOR NEXT