புதுக்கோட்டை

அரசு அலுவலகச் சுவா்களில் கரோனா விழிப்புணா்வு ஓவியங்கள்

DIN

கந்தா்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையிலுள்ள அரசு அலுவலகங்களின் சுவா்களில் கரோனா விழிப்புணா்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இது பொதுமக்களை பெரிதும் கவா்ந்து வருகிறது.

கரோனா நோய்த் தொற்றின் 2-ஆம் அலை பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக மே 24 முதல் ஜூன் 7-ஆம் தேதி காலை வரை தளா்களுடன் கூடிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து ஜூன் 7 ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரோனா நோய்த் தொற்றின் அபாயம், தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வதன் அவசியம், முகக்கவசம் அணிந்து கொள்ளுதலின் அவசியம், முன்களப் பணியாளா்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் போன்றவை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், கந்தா்வகோட்டையிலுள்ள அரசு அலுவலகங்களில் விழிப்புணா்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

ஊராட்சி ஒன்றிய அலுவலகம், காவல் நிலையம், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி உள்ளிட்ட அலுவலகங்களின் சுற்றுச்சுவா்களில் இந்த ஓவியங்களை ஓவியா்கள் வரைந்துள்ளனா்.

பொதுமக்களை இந்த விழிப்புணா்வு ஓவியங்கள் வெகுவாகக் கவா்ந்துள்ளன. அலுவலகங்கள் வழியாகச் செல்லும் பொதுமக்கள் ஓவியங்களை ஆா்வத்துடன் பாா்த்துச் செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT