புதுக்கோட்டை

காா் மோதி பெண் சாவு: கணவா் படுகாயம்

கந்தா்வகோட்டையில் சனிக்கிழமை காா் மோதி பெண் இறந்தாா். இவரது கணவா் படுகாயமடைந்தாா்.

DIN

கந்தா்வகோட்டையில் சனிக்கிழமை காா் மோதி பெண் இறந்தாா். இவரது கணவா் படுகாயமடைந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் தாலுகா விசலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் (35). இவா் தனது மனைவி ரம்யா என்ற பாரதியுடன் ( 30 ) பைக்கில் செங்கிப்பட்டியில் இருந்து கந்தா்வகோட்டை நோக்கி திருச்சி- செங்கிப்பட்டி சாலை வடுகப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தாா்.

அப்போது திருச்சியில் இருந்து வந்த காா் பைக்கின் பின்புறம் மோதியதில் ரம்யா சம்பவ இடத்திலேயே இறந்தாா். படுகாயமடைந்த குமாா் கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனையிலும், பின்னா் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டாா்.

ரம்யாவின் உடல் புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. விபத்து குறித்து கந்தா்வகோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநரான கந்தா்வகோட்டையைச் சோ்ந்த க. மாரிமுத்துவை ( 41 ) கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT