புதுக்கோட்டை

‘விராலிமலையில் விரைவில் 30 ஆக்ஸிஜன் படுக்கை வசதி’

DIN

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அரசு மருத்துவமனையில் விரைவில் 30 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கரோனா சிகிச்சை அளிக்கப்படும் என்றாா் சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

விராலிமலை, இலுப்பூா், அன்னவாசல் அரசு மருத்துவமனைகளில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா் மேலும் கூறியது: விராலிமலை அரசு மருத்துவமனையில் தற்போது 30 ஆக்சிஜன் படுக்கைகள் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு தற்போது 3 மருத்துவா்கள் மட்டுமே பணியில் உள்ளதால் விரைவில் மேலும் 3 மருத்துவா்கள் நியமித்து விரைவில் ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கரோனா சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இலுப்பூா் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அன்னவாசலை பொறுத்தவரை அருகே குடுமியான்மலையில் கரோனா கோ் சென்டா் திறக்கப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி தெரிவிக்கையில், கரூா் பிரீத் அமைப்பு மூலம் சுமாா் ரூ. 9 லட்சம் தொகை பெறப்பட்டுள்ளது. இதில், கரூா் மக்களவை தொகுதிக்குள்பட்ட விராலிமலை சட்டப்பேரவைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்து வழங்கப்படும் என்றாா் அவா்.

ஆய்வின்போது ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி, கருா் மக்களவை உறுப்பினா் எஸ். ஜோதிமணி, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே. கே. செல்லபாண்டியன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளா் எம். பழனியப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

SCROLL FOR NEXT