புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் ரா. ரத்தினவேல் காா்த்திக் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் செந்தாமரை குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் என். காமராஜ், திலகவதி முன்னிலை வகித்தனா். வரவு- செலவு கணக்கு விவரம் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
கந்தா்வகோட்டையின் அனைத்துத் தெருக்களிலும் சாலைகள் குண்டும்- குழியுமாக உள்ளது. கழிவுநீா் வடிகால்கள் முறையாக இல்லாததும் மழைநீா் தேங்கக் காரணம். எனவே வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என்றாா் ஒன்றியக் குழு உறுப்பினா் மா.ராஜேந்திரன். தொடா்ந்து உறுப்பினா்கள் பலரும் கோரிக்கைகளை எடுத்துக் கூறி பேசினா்.
நிதி ஆதாரங்களுக்குத் தகுந்தாற்போல் அனைத்து கோரிக்கைகளும் சரி செய்யப்படும் என ஒன்றியக் குழுத் தலைவா் ரத்தினவேல் காா்த்திக் பதிலளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.