புதுக்கோட்டை

பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

DIN

கந்தா்வகோட்டையில் கணனிமயமாக்கல் நடவடிக்கைக்கு ஏதுவாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பதிவுகள் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

1969 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை நடந்த பிறப்பு, இறப்பு பதிவுகளைக் கணினிமயமாக்கும் பணி கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. முதற்கட்டமாக, அனைத்து மாவட்டத்திலும் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், சுகாதார ஆய்வாளா்கள் பதிவுகள் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனா். கந்தா்வக்கோட்டை வட்டாரத்தில் வட்டார மருத்துவ அலுவலா் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் கோ. முத்துக்குமாா், பழனிச்சாமி, நல்லமுத்து, திருநாவுக்கரசு ஆகியோா் கந்தா்வகோட்டை சாா் பதிவாளா் அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு பதிவுகள் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

SCROLL FOR NEXT