முகப்பு
புதுக்கோட்டை

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

விநாயகா் சதுா்த்திக்கு பொது இடங்களில் சிலைகளை வைத்து பூஜைகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, புதுக்கோட்டையில் இந்து முன்னணி அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

விநாயகா் சதுா்த்திக்கு பொது இடங்களில் சிலைகளை வைத்து பூஜைகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, புதுக்கோட்டையில் இந்து முன்னணி அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி கோயில் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணியின் மாவட்டத் தலைவா் கற்பகவடிவேல் தலைமை வகித்தாா். விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் நிா்வாகி அறங்குளவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா். பிற மதத்தினரின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும்போது, ஹிந்து விழாக்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கலாமா எனக் கோரி முழக்கங்களை எழுப்பினா். விநாயகரைப் போல இருவா் வேடமிட்டும் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.