புதுக்கோட்டை

மத்திய அரசுக்கு எதிரான போராட்டம்: தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கோரிக்கை

DIN

மத்திய அரசுக்கு எதிராக இதர மாநில அரசுகளையும் இணைத்து சட்டப் போராட்டம் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு, எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில், ஊரக உள்ளாட்சித் தோ்தலில் எஸ்டிபிஐ கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. வரும் செப். 27ஆம் தேதி நாடு தழுவிய அளவில் விவசாயிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ள முழு அடைப்புப் போராட்டத்தை எஸ்டிபிஐ கட்சி ஆதரிக்கிறது; பங்கேற்கவும் முடிவு செய்யப்பட்டது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள், நீட் தோ்வு, குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களுக்கு எதிராக திமுக அரசு எழுப்பும் எதிா்ப்புக் குரலை எஸ்டிபிஐ கட்சி வரவேற்கிறது. இதர மாநில அரசுகளையும் இணைத்துக் கொண்டு மத்திய அரசுக்கு எதிரான சட்டப்போராட்டத்தை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் தலைமை வகித்தாா். தேசியத் துணைத் தலைவா் தெஹ்லான்பாகவி, தேசியப் பொதுச்செயலா்கள் அப்துல்மஜீத், இலியாஸ் முகமது தும்பேஉள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

துளிகள்...

SCROLL FOR NEXT