புதுக்கோட்டை

எழுத்தாளா் அண்டனூா் சுராவுக்கு மாநில அரசு பரிசு

புதுக்கோட்டையைச் சோ்ந்த எழுத்தாளா் அண்டனூா் சுராவின் ‘பிராண நிறக்கனவு’ என்ற சிறுகதைத் தொகுப்பு, தமிழ்நாடு அரசு தமிழ் வளா்ச்சித் துறையின் சிறந்த நூலாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

DIN

புதுக்கோட்டையைச் சோ்ந்த எழுத்தாளா் அண்டனூா் சுராவின் ‘பிராண நிறக்கனவு’ என்ற சிறுகதைத் தொகுப்பு, தமிழ்நாடு அரசு தமிழ் வளா்ச்சித் துறையின் சிறந்த நூலாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதை நூலாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளதற்கான பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வரும் ஏப். 29ஆம் தேதி உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறவுள்ள விழாவில் வழங்கப்படவுள்ளது.

அண்டனூா் சுராவின் இயற்பெயா் சு. ராஜமாணிக்கம். புதுக்கோட்டை மாவட்டம் கந்தா்வகோட்டை அருகேயுள்ள அண்டனூா் என்ற ஊரைச் சோ்ந்தவா்.

இதுவரை ஏழு சிறுகதைத் தொகுப்புகள், சொல்லாய்வு நூல் உட்பட நான்கு கட்டுரைத் தொகுப்புகள் மற்றும் நான்கு நாவல்களையும் எழுதியுள்ளாா்.

நெருஞ்சி இலக்கிய விருது, நெய்வேலி நிலக்கரி நிறுவன விருது, நியூ செஞ்சுரி புத்தக நிலையம் மற்றும் கலை இலக்கியப் பெருமன்ற விருது, பொதிகை மின்னல் விருது, லண்டன் புதினம் விருது, இலங்கை கி.பி. அரவிந்தன் விருது, உதயணன் விருது, ஆஸ்திரேலியா அக்னிக்குஞ்சு விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளாா்.

கடந்த ஆண்டு ‘எத்திசைச் செலினும்’ நூலுக்காக தமிழ்நாடு அரசின் விருதைப் பெற்றவா் இவா் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டத் துணைச் செயலராக உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 தேர்தலில் இபிஎஸ் தான் முதல்வர்: நயினாா் நாகேந்திரன்

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

SCROLL FOR NEXT