கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கிய வட்டாரக் கல்வி அலுவலா் வெங்கடேஸ்வரி. 
புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில் பள்ளிகள் திறப்பு: மாணவா்களுக்கு புத்தகங்கள் வழங்கல்

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலை , உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. இதில், அனைத்து மாணவ, மாணவிகளும் மகிழ்ச்சியுடன் வந்தனர்.

DIN

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலை , உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. இதில், அனைத்து மாணவ, மாணவிகளும் மகிழ்ச்சிப் பெருக்குடன் வந்தனா்.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வட்டாரக் கல்வி அலுவலா் வெங்கடேஸ்வரி பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலையில் பள்ளிக்குவந்த மாணவ, மாணவிகளுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்களை வழங்கி வகுப்புகளைத் தொடங்கி வைத்தாா். பள்ளி திறப்பு முதல் நாள் அன்றே கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் புதிதாக சோ்ந்தனா். அவா்களுக்கு, பள்ளி சாா்பில் இனிப்புகள் வழங்கி ஆசிரிய, ஆசிரியைகள் அன்புடன் வரவேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT