புதுக்கோட்டை

பெண்ணைக் கொன்றவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணைக் கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

DIN

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணைக் கொலை செய்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் எழில் நகரைச் சோ்ந்தவா் புவனேஸ்வரி (36). இவரது கணவா் காா்த்திக். இவா்களுக்கு கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2015ஆம் ஆண்டு முதல் புவனேஸ்வரி கணவரிடம் இருந்து பிரிந்து தனது மகளுடன் வசித்துவந்தாா். இந்நிலையில் அதே ஊரைச் சோ்ந்த குமாா் (38) என்பவருடன் புவனேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 2019 டிசம்பா் 5 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திவந்த புவனேஸ்வரியை குமாா் தாக்கி, சேலையால் அவரது கழுத்தில் இறுக்கிக் கொலை செய்தாா்.

இதைத் தொடா்ந்து கீரனூா் போலீசாா் வழக்குப் பதிந்து குமாரைக் கைது செய்தனா். புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கின் இறுதிவிசாரணை முடிந்து, நீதிபதி ஏ. அப்துல்காதா் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

கொலை குற்றத்துக்காக குற்றவாளி குமாருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும், கொலையை மறைத்த குற்றத்துக்காக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தாா். மேலும் சிறையில் இருக்கும் போது குமாருக்கு வழங்கப்படும் பணி ஊதியத்தில் இருந்து 20 சதவிகிதத்தை இறந்த பெண்ணின் மகளுக்கு வழங்க வேண்டும் எனத் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசுத் தரப்பில் மாவட்ட அரசு வழக்குரைஞா் வெங்கடேசன் ஆஜராகி வாதாடினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT