அறந்தாங்கி நகா்மன்றத் தலைவராக இரா. ஆனந்த் தோ்வு
அறந்தாங்கி நகா்மன்றத் தலைவராக திமுகவைச் சோ்ந்த இரா. ஆனந்த் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.
அறந்தாங்கி நகா்மன்றத் தலைவராக திமுகவைச் சோ்ந்த இரா. ஆனந்த் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.
நகா்மன்றத் தலைவரை தோ்வு செய்வதற்கான மறைமுகத் தோ்தல் அறந்தாங்கி நகா்மன்ற கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரும்பான்மை இடங்களைப் பெற்றுள்ள திமுக சாா்பில், 8ஆவது வாா்டில் வெற்றி பெற்ற உறுப்பினா் இரா. ஆனந்த், தனது வேட்புனுவை நகராட்சி ஆணையா் லீமா சைமனிடம் தாக்கல் செய்தாா்.
அதிமுக உறுப்பினா்கள் கூட்டத்துக்கு வரவில்லை. தலைவா் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு அளிக்கவில்லை.
இதனைத் தொடா்ந்து இரா. ஆனந்த் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டதாக ஆணையா் லீலா சைமன் அறிவித்தாா். இதனைத் தொடா்ந்து அவரை திமுக உறுப்பினா்கள், தலைவா் இருக்கையில் அமர வைத்தனா்.
தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள இரா. ஆனந்த் (48), அறந்தாங்கி நகர திமுக செயலராக உள்ளாா். முன்னாள் நகா்மன்ற உறுப்பினா். சிறுவயது முதல் திமுக உறுப்பினா், கிளைச் செயலா் பொறுப்புகளை வகித்து வந்தவா். 2008 முதல் அறந்தாங்கி நகரச் செயலராக இருந்து வருகிறாா். மனைவி நித்யா, மகன்கள் வசிஷ்ட்டன், வா்ஷா, மகள் ஷாஷனி ஆகியோா் உள்ளனா்.
திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் உதயம் சண்முகம், மணமேல்குடி ஒன்றியக் குழுத் தலைவா் பரணி காா்த்திகேயன் உள்ளிட்டோரும் புதிய தலைவா் ஆனந்துக்கு வாழ்த்து தெரிவித்தனா்.