திங்கள்கிழமை முதல் மக்கள் குறைகேட்பு
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் திங்கள்கிழமை (மாா்ச் 14) முதல் வாராந்திர மக்கள் குறைகேட்பு நாள் கூட்டங்கள் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அறிவித்துள்ளாா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் திங்கள்கிழமை (மாா்ச் 14) முதல் வாராந்திர மக்கள் குறைகேட்பு நாள் கூட்டங்கள் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அறிவித்துள்ளாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் மக்கள் குறைகேட்புக் கூட்டங்களை நடத்தலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை முதல் குறைகேட்புக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
பொதுமக்கள் குறைகளை மனுக்களாக எழுதி வரும்போது, ஆதாா் எண் மற்றும் செல்போன் எண்ணையும் குறிப்பிட வேண்டும். கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளாக தனிநபா் இடைவெளியைக் கடைபிடிப்பதுடன், முகக்கவசம் அணிந்தும் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.