புதுக்கோட்டை

திருத்தியது.எரிபொருள் விலை குறைப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

DIN

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தும், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டை பெட்ரோல் நிலையத்தில் விலை குறைக்காததைக் கண்டித்து, பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியில் லிட்டருக்கு ரூ. 8 மற்றும் டீசல் ரூ. 6 வீதம் வரியைக் குறைத்து சனிக்கிழமை அறிவித்தது. இந்த விலைக் குறைப்பு உடனே அமலுக்கு வரும் எனவும் அறிவித்தது. இந்நிலையில், அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் சிலா் ஞாயிற்றுக்கிழமை தங்களது இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பச் சென்றுள்ளனா். அப்போது, விலை குறைப்பு செய்யாமல், பழைய விலைப்படியே தொகையை வசூலித்துள்ளனா். இதைத் தட்டிக் கேட்டோருக்கும், பெட்ரோல் நிலைய ஊழியா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த பொதுமக்கள் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். பின்னா், அறந்தாங்கி போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத்தால் அறந்தாங்கி - பட்டுக்கோட்டை சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

SCROLL FOR NEXT