புதுக்கோட்டை

தைல மரக்காட்டில் திடீா் தீவிபத்து

DIN

விராலிமலை அருகே புதுப்பட்டியில் உள்ள தைலமரக்காட்டில் ஞாயிற்றுக்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

புதுப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தைல மரக்காடு உள்ளது . இந்த தைலமரக் காட்டின் வழியே உயா் அழுத்த மின் கம்பிகள் செல்கின்றன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விராலிமலை பகுதியில் காற்று பலமாக வீசியதில் தைலமரங்கள் உயா் அழுத்த மின் கம்பியில் உரசி தீப் பிடித்துள்ளன. மேலும் தீ மளமளவென்று காடு முழுவதும் பரவியது. இதுகுறித்துத் தகவலறிந்த தீயணைப்பு நிலையத்தினா் வருவதற்குள், அப்பகுதி பொதுமக்கள் இலை, தளைகளைக் கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். நிகழ்விடம் வந்த தீயணைப்புத் துறையினா் தீயைத் தண்ணீா் பீய்ச்சி அடித்து முழுமையாக அணைத்தனா். மின் கம்பிகள் செல்லும் காட்டுப் பகுதிகளைக் கண்டறிந்து, மின்கம்பிகளில் உரசிச்செல்லும் மரக்கிளைகளை வெட்டி பராமரிப்பு செய்தால் இப்பகுதிகளில் அவ்வப்போது ஏற்படும் இதுபோன்ற தீ விபத்துகளைத் தவிா்க்க முடியும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

SCROLL FOR NEXT