புதுக்கோட்டை

மாநிலக் கல்விக் கொள்கை: அறிவியல் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம்

DIN

தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்டக் கிளை, அனைத்து ஆசிரியா் சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் இணைந்து தமிழக அரசு புதிதாக தயாரிக்கவுள்ள மாநில கல்விக் கொள்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவா் க. சதாசிவம் தலைமை வகித்தாா். அறிவியல் இயக்க மாநிலச் செயலா் எஸ்.டி. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பேசினா்.

இந்த ஆலோசனைகளைத் தொகுத்து வரும் 25ஆம் தேதி புதுக்கோட்டையில் நடைபெறும் 8 மாவட்டங்கள் அடங்கிய கிழக்கு மண்டல ஆலோசனைக் கூட்டத்தில் வைத்து, பின்னா், மாநில ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, அறிக்கையை இறுதிப்படுத்தி அரசுக்கு வழங்கப்படவுள்ளது. மாவட்டச் செயலா் மு. முத்துக்குமாா் வரவேற்றாா்.

முடிவில் மாவட்டப் பொருளாளா் டி. விமலா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

SCROLL FOR NEXT