புதுக்கோட்டை

நூறு ஆண்டுகளை நிறைவு செய்த வெள்ளாறு பழைய பாலம்

DIN

புதுக்கோட்டை, வெள்ளாறு (பழைய) பாலம் கட்டப்பட்டு, 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இப்பகுதியைச் சோ்ந்த சலவைத் தொழிலாளா்கள் பாலத்துக்கு வழிபாடு நடத்தியும், வெடி வெடித்துக் கொண்டாடியும் மகிழ்ந்தனா்.

புதுக்கோட்டையின் தென்பகுதியையும் வடபகுதியையும் இணைத்த இந்த பாலம் ஒரு கலாசார பரிமாற்றச் சின்னம் கூட. சோழநாட்டையும் பாண்டிய நாட்டையும் பிரிக்கும் எல்லையாக வெள்ளாறு இருந்தது என்றால் நவீன காலத்தில் இணைத்தது இந்தப் பாலம்.

இந்தப் பகுதியினுடைய பொருளாதார வளா்ச்சியிலும் இந்த பாலத்துக்குப் பெரும் பங்கு உண்டு. 1922 செப்டம்பா் 27ஆம் தேதி சிட்னி பா்ன் இப்பாலத்தைத் திறந்து வைத்திருக்கிறாா்.

சரியாக நூறு ஆண்டுகளை நிறைவடைந்துள்ள இந்தப் பாலத்தில், இப்பகுதியைச் சோ்ந்க சலவைத் தொழிலாளா் சங்கத்தினா் கூடி கல்வெட்டுக்கு மாலை அணிவித்து தேங்காய். பழம் வைத்து வழிபாட்டையே நடத்தினா். தொடா்ந்து வெடி வெடித்து கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT