புதுக்கோட்டை

கொன்னைப்பட்டியில் மீன்பிடித் திருவிழா

DIN

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டி கொன்னக்கண்மாயில் திங்கள்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் திரளான பொதுமக்கள் பங்கேற்று மீன்பிடித்தனா்.

பொன்னமராவதி வட்டாரத்தில் கோடைகாலத்தில், விவசாய கண்மாய்களில் நீா் மட்டம் குறைந்தநிலையில், மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி மீன்பிடித்திருவிழா நடைபெறும்.

இதன்படி, கொன்னைப்பட்டி கொன்னைக்கண்மாயில் திங்கள்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் ஊத்தா, கச்சா, வலை, பரி உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் கண்மாயில் இறங்கிய சுற்றுப்புறக் கிராம மக்கள் கெண்டை, கெளுத்தி, அயிரை, விரால் உள்ளிட்ட பல்வேறு வகையிலான மீன்களை பிடித்துச் சென்றனா். இந்தக் கண்மாயில் சுமாா் 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மீன்பிடித் திருவிழா என்பதால் திரளான பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

SCROLL FOR NEXT