புதுக்கோட்டை

வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள பிரசித்தி பெற்ற வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள பிரசித்தி பெற்ற வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.16-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

இதைத்தொடா்ந்து, தினசரி கோயிலில் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவில் பெண்களின் ஆரத்திக்குடங்கள் அணிவகுக்க அம்மன் வீதியுலாவும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்ததன. மேலும், அலகுகுத்தி, பால்குடம் எடுத்து ஏராளமானோா் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதில், முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான தேரில், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை எழுந்தருளச் செய்து, தேரின் வடத்தை பிடித்து ஏராளமானோா் பக்தி பரவசத்தோடு இழுத்து வந்தனா். அப்போது, சுமாா் 3 மணிநேரத்துக்கும் மேலாக இடைவிடாது வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டன. தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

தேரோட்ட விழாவில் வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்துகொண்டனா். வடகாடு போலீஸாா் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT