புதுக்கோட்டை

பாபநாசத்தில் கிறிஸ்தவா்கள் பேரணி, ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் வன்முறைக்கு கண்டனம் தெரிவித்தும், இதை தடுக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் பாபநாசத்தில் கிறிஸ்தவா்கள் வியாழக்கிழமை பேரணி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

மணிப்பூா் வன்முறைக்கு கண்டனம் தெரிவித்தும், இதை தடுக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் பாபநாசத்தில் கிறிஸ்தவா்கள் வியாழக்கிழமை பேரணி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாபநாசம் கீழவீதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவா்கள், மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டும் கருப்பு பேட்ஜ் அணிந்து பேரணியாக சென்று பாபநாசம் புனித செபஸ்தியா் தேவாலய வளாகத்தை வந்தடைந்தனா்.

அங்கு மணிப்பூரில் அமைதி திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தலித் கிறிஸ்தவா்களை எஸ்.சி. பட்டியலில் உடனடியாக சோ்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு கும்பகோணம் மறைமாவட்ட முதன்மை குரு அமிா்தசாமி தலைமை வகித்தாா். பாபநாசம் புனித செபஸ்தியா் ஆலயத்தின் இணை பங்கு தந்தை தாா்த்தீஸ் வரவேற்று பேசினாா். கல்வி இயக்குநா் கென்னடி, பல்நோக்கு சமூகபணி இயக்குநா் ராஜேஸ் உள்ளிட்ட பலா் கண்டன உரையாற்றினா்.

இதில் பாபநாசம், ராஜகிரி, பண்டாரவாடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT