முகப்பு
புதுக்கோட்டை

சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் கண்மாயை சீரமைக்க வலியுறுத்தல்

பொன்னமராவதி அருகே சுகாதாரக் கேட்டை விளைவிக்கும் வகையில் கண்மாயில் காணப்படும் குப்பைகள், கோரைப்புற்களை அகற்றி நீா்நிலையை பாதுகாக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
குப்பைகள், கோரைப்புற்களோடு உள்ள பொன்னமராவதி பழனியப்பன் ஏந்தல் கண்மாய்.
பகிர்:

பொன்னமராவதி அருகே சுகாதாரக் கேட்டை விளைவிக்கும் வகையில் கண்மாயில் காணப்படும் குப்பைகள், கோரைப்புற்களை அகற்றி நீா்நிலையை பாதுகாக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

பொன்னமராவதி-கொப்பனாபட்டி சாலையில் காட்டுப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட வீட்டுவசதி வாரியக்குடியிருப்பு அருகேயுள்ள பழனியப்பன் ஏந்தல் என்னும் கண்மாய் போதிய பராமரிப்பின்றி உள்ளது.

பெரும்பாலும் கோரைப்புற்கள் மண்டிக் காணப்படும் இக்கண்மாயின் ஒரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதாலும், அப்பகுதி கழிவுநீரும் கண்மாயில் கலப்பதாலும் துா்நாற்றம் வீசி, சுகாதாரக்கேடு அபாயம் நிலவுகிறது. மேலும் அணைக்கப்படாத நெருப்பால் கோரைப்புற்கள், குப்பை மூலம் இப்பகுதியில் அடிக்கடி தீவிபத்து நேரிடுகிறது.

கண்மாயைச் சுற்றிலும் 4 மின்மாற்றிகள் உள்ளதால் தீ விபத்து ஏற்படும்போது மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனா். அதன்படி கடந்த வாரம் இக்கண்மாயில் ஏற்பட்ட தீ விபத்தால் நகா் முழுவதும் சுமாா் 3 மணிநேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டது. எனவே இக்கண்மாயில் படா்ந்துள்ள கோரைப்புற்களை அகற்றவும், குப்பைகளை அகற்றி கண்மாயில் தூய்மை பராமரிக்கவும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →