புதுக்கோட்டை

அன்னவாசலில்புற்றுநோய் விழிப்புணா்வுப் பேரணி

DIN

 குடுமியான்மலை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் சாா்பில் அன்னவாசலில் புற்றுநோய் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேரணியை கல்லூரி முதன்மையா் சே.நக்கீரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இதில், 357 நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு புற்றுநோய் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும் புற்றுநோய் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினா்.

அன்னவாசல் பேருந்து நிலையத்தில் இருந்து நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் முனைவா் ம. விஜயகுமாா் மேற்பாா்வையில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து அரசு மருத்துவமனை அருகே நிறைவடைந்தது.இதில் காவல் துணை ஆய்வாளா் என். உத்திராபதி, மாணவ மன்ற ஆலோசகா் முனைவா் வீ.மு. இந்துமதி, கல்லூரி ஒருங்கிணைப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை: விளம்பரப் பலகை அகற்ற ஓராண்டுக்கு முன்பே மனு! ஏன் நடவடிக்கை இல்லை?

மே 21-இல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்!

இம்பாக்ட் பிளேயர் விதிமுறைக்கு ஆதரவும் எதிர்ப்பும்!

தமிழக பெண் காவல் அதிகாரி மத்திய தொழில் பாதுகாப்புப்படையின் உயர்பதவியில் நியமனம்!

காட்டுப்பன்றிகளைத் தடுக்க அமைக்கப்பட்ட மின்வேலி இளைஞரின் உயிருக்கு எமனானது!

SCROLL FOR NEXT