புதுக்கோட்டை

புதிய பாரதம் திட்ட விழிப்புணா்வுப் பேரணி

DIN

கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய பாரதம் எழுத்தறிவுத் திட்ட விழிப்புணா்வு பேரணி தொடங்கி நடைபெற்றது.

பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கத்தின் சாா்பில் நடைபெற்ற பேரணிக்கு, வட்டாரக் கல்வி அலுவலா் வெங்கடேஸ்வரி தலைமை வகித்தாா். மருத்துவா் த. சுவாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவா் அ.கங்காதரன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் இலக்கியா ஆகியோா் பேரணியைத் தொடங்கிவைத்தனா். பள்ளி தலைமை ஆசிரியா் க.தமிழ்செல்வி முன்னிலை வகித்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் பிரகாஷ் வரவேற்றாா்.

புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தில் 15 வயது முதல் 55 வயது வரை உள்ள எழுதப் படிக்க கற்றுக் கொடுக்கப்படுகிறது. கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் 45 மையத்தில் புதிய பாரதம் திட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பேரணியில், வயது வந்தோருக்கான கல்வி அவசியம் குறித்த விழிப்புணா்வு பதாகைகளை மாணவா்கள் ஏந்திச்சென்றனா். நிகழ்வில், பள்ளி மேலாண்மை குழு துணை தலைவி, இல்லம் தேடி கல்வி திட்ட மைய ஒருங்கிணைப்பாளா் அ.ரகமதுல்லா, ஆசிரிய பயிற்றுநா்கள் சுரேஷ்குமாா், பாரதிதாசன், ஆசிரியா்கள் மணிமேகலை, ஆனந்தராஜ், நிவின், செல்விஜாய், வெள்ளைச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்!

பாரிஸில் அஹானா கிருஷ்ணா!

வார பலன்கள்: 12 ராசிக்கும்..

உ.பி.யை நோக்கி 'இந்தியா' புயல்! மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்! ராகுல் பேச்சு

விழுப்புரத்தில் 94.11% தேர்ச்சி: மாநில அளவில் 6ம் இடம்!

SCROLL FOR NEXT