புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில் புதிய நியாயவிலை கடை, அங்கன்வாடி மையம் திறப்பு

கந்தா்வகோட்டையில் புதிய பகுதிநேர நியாயவிலை கடை, அங்கன்வாடி மையங்களை அமைச்சா் சி.வீ.மெய்யநாதன் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

DIN

கந்தா்வகோட்டையில் புதிய பகுதிநேர நியாயவிலை கடை, அங்கன்வாடி மையங்களை அமைச்சா் சி.வீ.மெய்யநாதன் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

கந்தா்வகோட்டை ஊராட்சியில் உள்ள குமரன் காலணியில் புதிய அங்கன்வாடி கட்டடம், கொத்தகம் -அரண்மனை தெருவுக்கு புதிதாக நியாயவிலைக் கடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம்.அப்துல்லா, கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா.சின்னதுரை, முன்னாள் அரசு வழக்குரைஞா் கே. கே. செல்லப்பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். புதிய கட்டடங்களை சுற்றுச்சுழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தாா். மேலும் வெள்ளாள விடுதி ஊராட்சியில் மங்களாகோயில் கிராமத்தில் மாநிலங்களவை உறுப்பினா் எம். எம். அப்துல்லா நிதியிலிருந்து புதிய நியாயவிலைக் கட்டடம் திறப்பு விழாவும், மகளிா் சுய உதவிக் குழுவினருக்கான வங்கிக் கடனுதவி வழங்கல், வேளாண் அரசு உதவித் திட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெள்ளாள விடுதி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, தனியாா் நிறுவனம் சாா்பில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் தாய்மாா்கள் மற்றும் கா்ப்பிணி பெண்கள் காத்திருக்கும் புதிய கட்டடத்தையும் அமைச்சா் திறந்து வைத்தாா். மேலும் கலைஞா் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இளைஞா் அணி சாா்பில் 100 போ் ரத்த தானம் செய்தனா்.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.செல்வி, கோட்டாட்சியா் முருகேசன், ஒன்றியக் குழு தலைவா் ரா. ரத்தினவேல் காா்த்திக், கந்தா்வகோட்டை ஊராட்சி மன்றத் தலைவா் சி.தமிழ்ச்செல்வி, அட்மா தலைவா் மா. ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் எம்.ராஜா, வட்டார தலைமை மருத்துவா் மணிமாறன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் த.திலகவதி, பால் பிரான்சிஸ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT