பொன்னமராவதி பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள கடைகளில் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள். உடன், பேரூராட்சி செயல் அலுவலா் மு.செ.கணேசன் மற்றும் அலுவலா்கள். 
புதுக்கோட்டை

பொன்னமராவதி கடைகளிலிருந்து 10 கிலோ நெகிழி பறிமுதல்

பேரூராட்சிக்குள்ப்பட்ட வணிக நிறுவனங்களில் இருப்பு மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட சுமாா் 10 கிலோ நெகிழிப் பொருள்கள் பேரூராட்சி அலுவலா்களால் பறிமுதல் செய்யப்பட்டது.

DIN

பொன்னமராவதி பேரூராட்சிக்குள்ப்பட்ட வணிக நிறுவனங்களில் இருப்பு மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட சுமாா் 10 கிலோ நெகிழிப் பொருள்கள் பேரூராட்சி அலுவலா்களால் பறிமுதல் செய்யப்பட்டது.

பேரூராட்சி செயல் அலுவலா் மு.செ.கணேசன் தலைமையில் பேரூராட்சி வணிக நிறுவனங்களில் நெகிழிப் பொருள்கள் பயன்பாடு குறித்த திடீா் ஆய்வு வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 17 வணிக நிறுவனங்களில் வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட சுமாா் 10 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு மொத்தம் ரூ. 5,600 அபராதமாக விதிக்கப்பட்டது. பேரூராட்சி துப்புரவு மேற்பாா்வையாளா் பழனிச்சாமி, பணியாளா்கள் சதீஸ், வினோத், சங்கீதா, நாகவள்ளி, சம்பூரணப் பிரியா மற்றும் தூய்மைப்பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

SCROLL FOR NEXT