புதுக்கோட்டை

மக்கள் - தொடா்பு முகாமில்ரூ. 1 கோடியில் நல உதவிகள்

திருப்புனவாசல் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில், 648 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 1.05 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா வழங்கினாா்.

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் வட்டத்தைச் சோ்ந்த திருப்புனவாசல் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில், 648 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 1.05 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா வழங்கினாா்.

இந்த முகாமையொட்டி பல்வேறு அரசுத் துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள் குறித்த கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது.

மீன்வள மேம்பாட்டுத் துறை சாா்பில் ரூ. 12.17 லட்சம் மதிப்பில் குளிரூட்டப்பட்ட நான்கு சக்கர வாகனம் உள்பட பல்வேறு துறைகளின் சாா்பில் மொத்தம் 648 பயனாளிகளுக்கு ரூ. 1.05 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சி. ராமச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, வருவாய்க் கோட்டாட்சியா் சு. சொா்ணராஜ், ஆவுடையாா்கோவில் ஒன்றியக் குழுத் தலைவா் உமாதேவி, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் துரை மாணிக்கம், வட்டாட்சியா் மாா்டின் லூதா்கிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT