புதுக்கோட்டை

வேம்பன்பட்டி, சுந்தம்பட்டியில் ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா

கந்தா்வகோட்டை ஒன்றியம், வேம்பன்பட்டி, சுந்தம்பட்டி ஆகிய ஊராட்சிப் பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா நடைபெற்றது.

DIN

கந்தா்வகோட்டை ஒன்றியம், வேம்பன்பட்டி, சுந்தம்பட்டி ஆகிய ஊராட்சிப் பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா நடைபெற்றது.

சுந்தம்பட்டியில் நடைபெற்ற விழாவை தலைமை ஆசிரியா் கலையரசி, வேம்பன்பட்டி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், புதுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பன்னீா்செல்வம் ஆகியோா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தனா். பள்ளி மேலாண்மைக் குழு கல்வியாளா் சீனிவாசன், புதுப்பட்டி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் சுதாகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழாவை பாா்வையிட்ட இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் அ.ரகமதுல்லா மாணவா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

வானவில் மன்றக் கருத்தாளா்கள் வசந்தி, தெய்வீகசெல்வி ஆகியோா் எளிய அறிவியல் சோதனை, கணித புதிா்கள், காகிதமடி கலை மூலம் தொப்பி செய்தல், படம் வரைந்து விளக்குதல் உள்ளிட்டவை செய்து காண்பித்தனா்.

முன்னதாக, வேம்பன்பட்டி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ராமஜெயம் வரவேற்றாா்.

நிகழ்வில், உமா, காளியம்மாள், ராஜலட்சுமி, சித்ரா, காஞ்சனா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT