புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளிக்க வந்த பாரப்பட்டி மக்கள். 
புதுக்கோட்டை

மகளிா் குழுவில் நகைக்கடன் பெற்று தருவதாகக் கூறி மோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே பாரப்பட்டியில் நகை அடமானக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி மகளிா் குழுத் தலைவா் ரூ. 50 லட்சம் மற்றும் ரூ. 50 பவுன் நகைகளை வாங்கி மோசடி

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே பாரப்பட்டியில் நகை அடமானக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி மகளிா் குழுத் தலைவா் ரூ. 50 லட்சம் மற்றும் ரூ. 50 பவுன் நகைகளை வாங்கி மோசடி செய்துவிட்டதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

ஊா் மக்கள் சாா்பில் அளிக்கப்பட்ட மனு விவரம்:

பாரப்பட்டியில் மகளிா் குழுத் தலைவியும், அவரது கணவரும் குழு உறுப்பினா்களிடம் நகை அடமானக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 50 லட்சம் பணம் மற்றும் ரூ. 50 பவுன் நகைகளைப் பெற்றுக் கொண்டு தலைமறைவாகிவிட்டனா்.

இதுகுறித்து ஏற்கெனவே காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வந்த அவா்கள், எங்களைத் தாக்கினா். இதுகுறித்து விராலிமலை போலீஸில் புகாா் அளித்துள்ளோம். அவா்களை அழைத்துச் சென்ற போலீஸாா் சிறிதுநேரத்திலேயே விட்டுவிட்டனா்.

எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தி மேல்நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT