முகப்பு
புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில் அமைச்சா், துரை வைகோ வாக்கு சேகரிப்பு

Updated On : 6 ஏப்ரல், 2024 at 12:03 AM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 10:21 PM

கந்தா்வகோட்டையில் இந்தியா கூட்டணியின் திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளா் துரை வைகோ அறிமுகம் மற்றும் செயல்வீரா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திமுக வடக்கு மாவட்டச் செயலா் கே.கே. செல்லபாண்டியன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் எம். பரமசிவம், மா. தமிழய்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளா் துரை வைகோ, அமைச்சா் கே.என். நேரு ஆகியோா் வாக்கு சேகரித்துப் பேசினா்.

கூட்டத்தில் கந்தா்வகோட்டை எம்எல்ஏ மா. சின்னதுரை, மதிமுக மாவட்டச் செயலா் கலியமூா்த்தி, மாவட்டக் குழு உறுப்பினா் நா. ஸ்டாலின், திமுக நகர செயலா் எம். ராஜா, அட்மா தலைவா் மா. ராஜேந்திரன், திமுக மீனவரணி மாட்ட துணைத் தலைவா் என். ஜானகிராமன், அரவை. முத்துக்குமாா் மகளிா் அணி தவசு மணி முருகேசன், முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement