புதுக்கோட்டை, ஆக. 14: தலித் ஒருவரை முதல்வராக ஏற்கும் அளவுக்கு இன்னும் சமூகச் சூழல் மாறவில்லை என்ற திருமாவளவளின் கருத்தை ஏற்கிறேன் என்று சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.
புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: தலித் ஒருவா் முதல்வராக வரும் சூழல் இன்னும் உருவாகவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் கூறியிருப்பதை ஏற்கிறேன். அது உண்மைதான். தலித் ஒருவரை முதல்வராக ஏற்கும் அளவுக்கு இன்னும் சமூகச் சூழல் மாறவில்லை. தமிழ்நாட்டிலும் இதே நிலைதான்.
நடிகா் விஜய் அரசியலுக்கு வந்து நீட் தோ்வு தொடா்பாக மட்டுமே கருத்தைச் சொல்லியிருக்கிறாா். அதானி விவகாரத்தில், காவிரி விவகாரத்தில் என பொது விஷயங்களில், ஆணவக் கொலைகள் குறித்தும் கருத்து சொல்லட்டும். அதன்பிறகு அவரை ஏற்பதா? நிராகரிப்பதா? எனச் சொல்லலாம் என்றாா் காா்த்தி சிதம்பரம்.