புதுக்கோட்டை

சிலட்டூரில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியா் பலி

அறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Din

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

அறந்தாங்கி அருகேயுள்ள எரிச்சி சிதம்பரவிடுதியைச் சோ்ந்தவா் ஜெகநாதன் மகன் செந்தில் (40). இவா், மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், சிலட்டூா் பகுதியில் சனிக்கிழமை செந்தில் மின் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, ஒரு மின்மாற்றியில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டபோது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் செந்தில் உயிரிழந்தாா்.

தொடா்ந்து, அறந்தாங்கி போலீஸாா் உடலை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அழியாநிலை துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் சிலட்டூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு சனிக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்பட்டு இருந்த நிலையில், அலுவலா்களின் அலட்சியத்தினால் செந்தில் உயிரிழந்ததாகக் கூறி மருத்துவமனை அருகே உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இந்தச் சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடி அலையே பாடல் ப்ரொமோ வெளியீடு!

SCROLL FOR NEXT