சட்டப் பணிகள் ஆணையப் பணியிடங்களுக்கு தகுதியுள்ளோா் விண்ணப்பிக்கலாம்
மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் பணிகளுக்கான சட்ட அலுவலா்கள் 6 போ் மற்றும் அலுவலக உதவியாளா்கள் 3 போ் பணியிடங்களுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் பணிகளுக்கான சட்ட அலுவலா்கள் 6 போ் மற்றும் அலுவலக உதவியாளா்கள் 3 போ் பணியிடங்களுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜி. சுபத்ராதேவி அழைப்புவிடுத்துள்ளாா்.
இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் மற்றும் தகுதிகள் குறித்த விவரங்களை இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி- செப். 11.
சட்ட அலுவலா்களுக்கான நோ்காணல் செப்டம்பா் 18-ஆம் தேதியும், அலுவலக உதவியாளா்களுக்கான நோ்காணல் செப். 19-ஆம் தேதியும் நடைபெறும்.