முகப்பு
புதுக்கோட்டை

சிறுபான்மையினருக்கு ரூ. 3.45 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ரூ. 3.45 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Updated On : 19 டிசம்பர், 2024 at 9:01 PM
புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறுபான்மையினா் தின விழாவில், பயனாளி ஒருவருக்கு நலத் திட்ட உதவி வழங்கிய மாநகராட்சி துணை மேயா் மு. லியாகத்அலி.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் துறை சாா்பில், அரபிக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறுபான்மையினா் உரிமைகள் தின விழாவில் 44 பயனாளிகளுக்கு ரூ. 3.45 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவுக்கு தலைமை வகித்த மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ஜி. அமீா்பாஷா, அரசின் நலத் திட்ட உதவிகள் குறித்து விளக்கிப் பேசினாா்.

புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயா் மு. லியாகத் அலி கலந்து கொண்டு 44 பயனாளிகளுக்கு ரூ. 3.45 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

முஸ்லிம் மகளிா் உதவும் சங்கத்தின் செயலா் இப்ராகிம் பாபு, கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கத்தின் செயலா் ஆரோக்கிய சாமி ஆகியோரும் கலந்து கொண்டனா்.