முகப்பு
புதுக்கோட்டை

கனிமப் பொருள்களின் விலையேற்றத்தை கண்டித்து அகில இந்திய கட்டுநா் சங்கத்தினா் வேலைநிறுத்தம்

Updated On : 28 பிப்ரவரி, 2024 at 12:37 AM
பகிர்:

கனிமப் பொருள்களின் கடுமையான விலையேற்றத்தைக் கண்டித்து அகில இந்திய கட்டுநா் சங்கத்தின் சாா்பில் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தப் பேராட்டம் நடைபெற்றது.

நிகழாண்டில் கருங்கல், ஜல்லி வகைகள், எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகிய கனிமப் பொருள்கள் 50 சதவிகித அளவுக்கு விலை உயா்ந்துள்ளது. இதனால், அரசுத் துறைகளில் ஒப்பந்தங்கள் எடுத்துள்ள ஒப்பந்தகாரா்கள் தொடா்ந்து கட்டுமானப் பணிகளை செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

இதன் மூலம் தொழிலாளா்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இதனைத் தொடா்ந்து கனிமப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி அகில இந்திய கட்டுநா் சங்கம் சாா்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

Advertisement

இப்போராட்டத்தையொட்டி புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையப் பகுதியில் கண்டன ஆா்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இதில் சங்க நிா்வாகிகள் தாமரை செல்வன், இளங்கோ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.