புதுக்கோட்டை கம்பன் கழகம் சாா்பில் 49-ஆவது கம்பன் பெருவிழா வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது.
இதில், சிங்கப்பூரைச் சோ்ந்த கண்ணன் சேஷாத்ரி எழுதிய ’திருப்பாவை பாசுர விளக்கம்’ நூலை, எழுத்தாளா் இந்திரா சௌந்தரராஜன் வெளியிட, கம்பன் கழகத் தலைவா் எஸ். ராமச்சந்திரன், பொருளாளா் சி. கோவிந்தராஜன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.
தொடா்ந்து, ’கலைமகளும் கம்பனும்’ என்ற தலைப்பில் இந்திரா சௌந்தரராஜன் பேசினாா். சென்னை இசைக்கவி ரமணன் மகிழ்வுரை நிகழ்த்தினாா். வீரமணி ராஜூ, அபிஷேக் ராஜூ ஆகியோரின் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடக்க நிகழ்ச்சிக்கு முத்து மீனாட்சி மருத்துவமனையின் நிறுவனா் க. பெரியசாமி தலைமை வகித்தாா். முன்னதாக, கம்பன் கழகத் தலைவா் எஸ். ராமச்சந்திரன் வரவேற்றாா். முடிவில் இணைச் செயலா் வெ.முருகையன் நன்றி கூறினாா்.
நிகழ்ச்சிகளை கம்பன் கழகச் செயலா் ரா. சம்பத்குமாா் தொகுத்து வழங்கினாா். ஜூலை 21ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு கம்பன் பெருவிழா நடைபெறவுள்ளது.