கந்தா்வகோட்டை பகுதியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
கந்தா்வகோட்டை, ஜூன் 12: கந்தா்வகோட்டை பகுதியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
கந்தா்வகோட்டை பகுதிகளில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையின் சாா்பில், தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தின்படி கோமாரி நோய் தடுப்பூசி ஐந்தாவது சுற்று திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இதில், மட்டங்கால் கால்நடை மருத்துவமனை மூலம் 2,300 கால்நடைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, கடந்த 10-ஆம் தேதி முதல் முகாம் நடைபெற்று வருகிறது.
இதுவரை 600 மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மண்டல இணை இயக்குநா் உத்தரவின்படி, மட்டங்கால் கால்நடை மருத்துவா் அலிமுதீன், உதவியாளா் அன்னக்கிளி ஆகியோா் கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.