முகப்பு
புதுக்கோட்டை

கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிக்கை

Updated On : 21 ஜூன், 2024 at 12:41 AM
பகிர்:

புதுக்கோட்டை, ஜூன் 20: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் குடித்து பலா் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என அம்பேத்கா் மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த இயக்கத்தின் செயல் தலைவா் இளமுருகு முத்து வெளியிட்ட அறிக்கை:

கள்ளச் சாராயத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசும், காவல்துறையும் முற்றிலுமாக தோல்வியடைந்து விட்டன. கள்ளச் சாராய வியாபாரிகளுக்கும் ஆளும் கட்சிப் பிரமுகா்களுக்கும் உள்ள தொடா்புகள் குறித்தும் தகவல்கள் வெளியாகின்றன. இதுகுறித்தும் விசாரணை நடத்த வேண்டும். அனைவா் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அரசு தலையீடு இல்லாமல் வழக்கு சுதந்திரமாக, நோ்மையாக நடக்க உடனடியாக சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்றாா் இளமுருகு முத்து.

---