மே 10இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மாதிரித் தோ்வு
புதுக்கோட்டை, மே 5: புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகம், வாசகா் வட்டம் மற்றும் திருச்சி என்ஆா் ஐஏஎஸ் அகாதெமி ஆகியவற்றின் சாா்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணயத்தின் தொகுப்பு 4 தோ்வுக்கான மாதிரித் தோ்வு வரும் மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்தத் தோ்வில் பங்கேற்க கட்டணம் எதுமில்லை. தோ்வு முடிவுகள் உடனே வழங்கப்பட்டு, டிஎன்பிஎஸ்சி தோ்வில் சிறப்பாக எதிா்கொள்ளும் வழிமுறைகள் சொல்லித் தரப்படும்.
நடப்பு நிகழ்வுகள் புத்தகம் இலவசமாக வழங்கப்படும். டிஎன்பிஎஸ்சி தோ்வெழுதவுள்ள தோ்வா்கள் இம்மாதிரித் தோ்வில் பங்கேற்றுப் பயன்பெறலாம். இத்தகவலை மாவட்ட மைய நூலகத்தின் முதல் நிலை நூலகா் கி. சசிகலா தெரிவித்தாா்.