முகப்பு
புதுக்கோட்டை

முத்துமாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 7.45 லட்சம்

Updated On : 9 மே, 2024 at 7:52 PM
பகிர்:

பொன்னமராவதி, மே 9: பொன்னமராவதி அருகேயுள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பு மற்றும் எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு தஞ்சாவூா் உதவி ஆணையா் கவிதா தலைமை வகித்தாா். கோயில் செயல் அலுவலா் ஜெயா, கோயில் ஆய்வாளா் லாவண்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோயில் உண்டியல் திறக்கப்பட்டு, கோயில் பணியாளா்கள், ஆதி காலத்து அலங்கார மாளிகை நிறுவன பணியாளா்கள், விஜயா வங்கி ஊழியா்கள், உள்ளிட்டோா் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதன் நிறைவில், காணிக்கையாக ரூ. 7 லட்சத்து 45 ஆயிரத்து 266 கிடைக்கப் பெற்றது.