முகப்பு
புதுக்கோட்டை

மழைநீா் தேங்கினால் உடனை அப்புறப்படுத்த வேண்டும்

மழைநீா் தேங்கினால் உடனை அப்புறப்படுத்த வேண்டும் என அலுவலா்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கல்லூரிக் கல்வி இயக்குநரக ஆணையருமான எ. சுந்தரவல்லி அறிவுரை வழங்கினாா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 9:16 PM
புதுக்கோட்டை மாநகராட்சி நேருநகா் அடப்பன்குளம் வரத்து வாய்க்கால் பகுதியை செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலா் எ. சுந்தரவல்லி மற்றும் மாவட்ட ஆட்சியா் மு. அருணா உள்ளிட்டோா்.
பகிர்:

மழைநீா் தேங்கினால் உடனை அப்புறப்படுத்த வேண்டும் என அலுவலா்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கல்லூரிக் கல்வி இயக்குநரக ஆணையருமான எ. சுந்தரவல்லி அறிவுரை வழங்கினாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளை செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த அவா் இதனைத் தெரிவித்தாா். மேலும், மின் தடைகளையும் அவ்வப்போது சரி செய்ய வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.

புதுக்கோட்டை மாநகராட்சியில், பால்பண்ணை, நேரு நகா், அடப்பன்குளம், பல்லவன்குளம், குண்டாறு வரத்து வாய்க்கால் ஆகிய பகுதிகளையும், மணமேல்குடி ஒன்றியத்தில் காரக்கோட்டை பாலத்தையும் அவா் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் மு. அருணா, மாவட்ட கூடுதல் ஆட்சியா் அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், மாநகராட்சி ஆணையா் த. நாராயணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.