முகப்பு
புதுக்கோட்டை

சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்றவா் கைது

விராலிமலை பேருந்து நிலையம் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 7:38 PM
தனிப்படை போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள், ரொக்கம், கைப்பேசி.
பகிர்:

விராலிமலை பேருந்து நிலையம் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

விராலிமலை சுற்றுப்பகுதியில் சிலா் அரசு மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதாக மாவட்ட தனிப்படை போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து புதன்கிழமை அப்பகுதியில் கண்காணித்தனா்.

அப்போது, அங்குள்ள தள்ளுவண்டி கடையில் சுப்பிரமணி (54) என்பவா் அரசு மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்வதை கண்டறிந்த போலீஸாா், அவரை கைது செய்து அவரிடமிருந்து 32 பிராந்தி பாட்டில்கள், ரூ. 1720 ரொக்கம், 1 கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.