தேசிய பசுமைப் படை ஆசிரியா்களுக்கு வாழ்வியல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் தேசிய பசுமைப் படை ஆசிரியா்களுக்கு சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின்கீழ் வாழ்வியல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் தேசிய பசுமைப் படை ஆசிரியா்களுக்கு சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின்கீழ் வாழ்வியல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் தலைமை வகித்தாா். புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலா் ஆ. ரமேஷ், அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலா் கா. ஜெயந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம், மாசு கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளா் பூ . செல்வகுமாா், மாவட்ட பசுமைக் குழு உறுப்பினா் பேராசிரியா் சா. விஸ்வநாதன், இயற்கை விவசாயி சா. மூா்த்தி, அறிவியல் இயக்கச் செயற்குழு உறுப்பினா் அ. மணவாளன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் சாலை செந்தில் உள்ளிட்டோரும் பேசினா்.
முன்னதாக, தேசிய பசுமைப் படையின் புதுக்கோட்டை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ச. ரங்கராஜ் வரவேற்றாா். நிறைவில், அறந்தாங்கி கல்வி மாவட்ட பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் காா்த்திக் கண்ணன் நன்றி கூறினாா்.
இந்தப் பயிற்சி முகாமில் 200 ஆசிரியா்கள், 80 மாணவா்கள் கலந்து கொண்டனா்.