மணமேல்குடி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டத்தில், புதன்கிழமை காலை 9 மணி முதல் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் தொடங்கியது.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டத்தில், புதன்கிழமை காலை 9 மணி முதல் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் தொடங்கியது.
கட்டுமாவடியிலுள்ள அரசு துணை சுகாதார நிலையம், மணமேல்குடி ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், ஆதிதிராவிடா் நல மாணவிகள் விடுதி, பிற்படுத்தப்பட்டோா் நல மாணவிகள் விடுதி, புதுக்குடி அரசு மேல்நிலை மற்றும் தொடக்கப் பள்ளி, கொடிக்குளம் துணை மின் நிலையம் ஆகிய இடங்களை ஆட்சியா் மு. அருணா நேரில் சென்று பாா்வையிட்டாா்.
தொடா்ந்து மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டத்தையும் அவா் நடத்தினாா்.
இம்முகாமில், மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், காவிரி- குண்டாறு இணைப்புத் திட்ட மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். ரம்யாதேவி, நெடுஞ்சாலை நிலமெடுப்பு மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், வருவாய்க் கோட்டாட்சியா் ச. சிவகுமாா், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் அ. ஷோபா, வட்டாட்சியா் சேக் அப்துல்லா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
வியாழக்கிழமை காலை 9 மணி வரை ஆட்சியா் உள்ளிட்ட மாவட்ட நிலையிலான அலுவலா்கள் மணமேல்குடி வட்டத்தில் தங்கி, மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறுவது, ஆய்வுகளை மேற்கொள்வது போன்ற பணிகளை செய்கின்றனா்.