முகப்பு
புதுக்கோட்டை

வேங்கைவயல் விவகாரம்: குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கோரி சிபிசிஐடி மனு

வேங்கைவயல் சம்பவத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் ஒருமாத கால அவகாசம் கோரி சிபிசிஐடி போலீஸாா் மாவட்ட எஸ்சி-எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 9:42 PM
பகிர்:

வேங்கைவயல் சம்பவத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் ஒருமாத கால அவகாசம் கோரி சிபிசிஐடி போலீஸாா் மாவட்ட எஸ்சி-எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பின் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் 2022, டிச. 26-ஆம் தேதி தெரியவந்தது.

இந்தச் சம்பவம் தொடா்பாக தற்போது தஞ்சை சிபிசிஐடி துணைக் காவல் கண்காணிப்பாளா் கல்பனா தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

சுமாா் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை.

இந்த நிலையில், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்கு அவகாசம் கோரி சிபிசிஐடி போலீஸாா் பல முறை மனு தாக்கல் செய்துள்ளனா்.

இதன்படி, மேலும் ஒரு மாதம் அவகாசம் கோரி புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி-எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சாா்பில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →